அமைச்சு பதவியை துறக்கிறார் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

5 months ago


நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இந்த மாத இறுதியில் தான் வகிக்கும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமப்பு அமைச்சு பதவியைத் துறக்கவுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாகவே அவர் தனது பதவியை துறக்கிறார் என்று சிறீலங்கா சுதந்திர கட்சி வட்டாரங்கள் தெரி வித்தன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக விஜயதாஸ ராஜபக்ஷ போட்டியிடுவார் என்று அந்த கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார்.

இதனிடையே, மைத்திரிபால சிறி சேன சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியில் தொடர முடியாதென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன் பின்னர், அவர் தலைமை பதவியை இராஜிநாமா செய்தார். தற்காலிக பதில் தலைவராக விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட் டார். எனினும், இதற்கும் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

விஜயதாஸ ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராகத் தொடர் கின்றபோதிலும் அரசாங்கத்துக்கு எதிராக விமர்சனங்களையும் முன் வைத்து வருகிறார்.

இந்த நிலையிலேயே சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தனது அமைச்சு பதவியை துறக்கிறார். இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் நடுப்பகு திக்கு முன்னர் அவர் தனது அமைச்சு பொறுப்பை துறைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


அண்மைய பதிவுகள்