கனடாவில் பல்வேறு ஆயுத குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 32 பேரை பொலிஸார் கைது செய் துள்ளனர்.
4 months ago
கனடாவில் பல்வேறு ஆயுத குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 32 பேரை பொலிஸார் கைது செய் துள்ளனர்.
டர்ஹம் பொலிஸார் இந்தச் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். கடந்த ஆறு மாத காலமாக இந்த குற்றவாளிக் கும்பல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து 16 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 32 பேருக்கு எதிராகவும் 184 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள் ளன என டர்ஹம் பொலிஸார் தெரி விக்கின்றனர்.
சட்டவிரோதமான ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், மோசடி சம்பவங்களுடன் இந்தக் கும்பல் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.