சர்வதேச விவாதப் போட்டியில் யாழ்.,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்ட அறிவியல் தமிழ் அணி 2 ஆம் இடத்தைப் பெற்றது.

1 day ago



சர்வதேச விவாதப் போட்டியில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை கொண்ட அறிவியல் தமிழ் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

மலேசியா திரங்காணு பல்கலைக்கழகம், சர்வதேச தமிழ் இளையோர் மாநாட்டை முன்னிட்டு நடத்திய அனைத்துலக விண்ணரங்க சொற்போர் விவாதப் போட்டியில் குறித்த அறிவியல் தமிழ் அணி முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுகளில் முறையே இந்தியா, சிங்கப்பூர், மலேசியா அணிகளை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

இந்த நிலையில் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் புரட்சியின் ஊற்று, தமிழிளையோர் கூற்று மோதிய இலங்கை அணி தோல்வியடைந்தது.

இருப்பினும், சர்வதேச விவாதப் போட்டியில் இரண்டாமிடம் பெற்று அசத்தியது.



அண்மைய பதிவுகள்