தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் மலையகம்-வடக்கு - கிழக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்.
தேசிய மக்கள் சக்தியின் இடைக்கால அமைச்சரவையில் வடக்கு - கிழக்கு, மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருப்பார்கள் என்று கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இலங் கையின் பரந்துபட்ட அரசியல் அடையாளத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இடைக்கால அமைச்சரவையை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார்.
நாங்கள் இலங்கை அரசாங்கத்தை ஏற்படுத்த விரும்புகின்றோம். சிங்கள அரசாங்கத்தையில்லை எனத் தெரிவித்துள்ள அவர் அரசாங்கம் சாராத பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருக்கும் முதலாவது அமைச்சரவையாக இது காணப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
222 பாராளுமன்ற உறுப்பினர்களில் வடக்கு - கிழக்கு மலையகத்தைச் சேர்ந்த சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
அவர்கள் இடைக்கால அர சாங்கத்தை அமைப்பதற்காக தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.