இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐ.என்.எஸ் மும்பை" எனும் போர்க்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்.

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “ஐ.என்.எஸ் மும்பை" எனும் போர்க்கப்பல் 3 நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை (26) கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.
இப் போர்க்கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் காலப் பகுதியில் இந்திய இலங்கை கடற்படையினருக்கு இடையிலான அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், இலங்கை கடற்படையினர் அக்கப்பலுக்கு சிநேகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, அதனைப் பார்வையிடுவர்.
அதேபோன்று இக்கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தவுடன் அக்கப்பலின் கட்டளை அதிகாரி இலங்கையின் மேற்கு கடற்பரப்புக்கான தளபதி ரியர் அட்மிரல் டபிள்யு.டி.சி.யு. குமாரசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடுவார்.
அதுமாத்திரமன்றி இக்கப்பல் விஜயத்தின்போது இலங்கை கடற்படையினருடன் இணைந்து விளையாட்டு நிகழ்வுகள், யோகாசனம், கடற்பரப்பு தூய்மையாக்கல் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
