2022 ஆம் ஆண்டில் ஓ.இ.சி.டி. நாடுகள் என்று கூறப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு நாடுகளுக்கு 5.6 லட்சம் இந்தியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற ஓ.இ.சி.டி. நாடுகளுக்கு இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நசிடி நாடுக மக்கள் குடிபெயர்ந்து விடுகின்றனர்.
உயர் படிப்பு, வேலை, திருமணம் முடித்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அந்த நாடுகளுக்கு மக்கள் குடிபெயர்கின்றனர்.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த 5.6 லட்சம் பேர், ஓ.இ.சி.டி. நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
இந்த ஓ.இ.சி.டி. நாடுகளுக்கு குடி பெயரும் நாடுகள் வரிசையில் இந்தியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2022 ஆம் ஆண்டில் 35 சதவீதம் கூடுதலாக இந்தியர்கள் ஓ.இ.சி.டி. நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ள தகவல் கிடைத் துள்ளது.
2022 இல் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்த 5.6 லட்சம் இந்தியர்களில் 1.12 லட்சம் பேர் பிரிட்டனுக்குச் சென்றுள்ளனர்.
அமெரிக்காவுக்கு 1.25 லட்சம் பேரும், கனடாவுக்கு 1.18 லட்சம் பேரும் இடம்பெயர்ந்துள்ளனர்.
அதேநேரத்தில் ரஷ்யா, ரொமேனியா நாடுகளில் இருந்து தலா 2.7 லட்சம் மக்கள் ஓ.இ.சி.டி. நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
ரஷ்யாவிலிருந்து துருக்கி, இஸ்ரேல், ஜெர்மனி நாடுகளுக்கு அதிக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.