இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவுக்குச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“சீன அரசின் சார்பிலும் மக்களின் சார்பிலும் தங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்
இலங்கையும் சீனாவும் பாரம்பரிய நட்பு அயல்நாடுகள். இரண்டு நாடுக ளும் இராஜதந்திர உறவை ஏற்படுத்தி 67 வருடங்களாகின்ற நிலையில் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வையும், ஆதரவையும் வழங்கி வருகின்றன.
நான் இலங்கை - சீன உறவுகளுக்குப் பெரும் முக்கியத்துவத்தை வழங்குகின்றேன்.
உங்களுடன் பாரம்பரிய நட்புறவை முன்னெடுப்பதற்கும், பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் வெற்றிகரமான விடயங்களைச் சாதிப்பதற்கும் நான் ஆர்வமாக உள்ளேன்."- என்றுள்ளது.