பிரபாகரனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது சந்தேகமே!இந்தியா ருடேயின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ராஜ் செங்கப்பா கருத்து |
பிரபாகரனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது சந்தேகமே!இந்தியா ருடேயின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ராஜ் செங்கப்பா கருத்து |
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை முதன்முதலில் படம் பிடித்தது தான் என இந்தியா டுடே குழுமத்தின் ஆசிரியபீட இயக்குநர் ராஜ் செங்கப்பா கொழும்பில் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதில் மர்மங்கள், சந்தேகங்கள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இந்திய ஊடக நட்புறவு சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ் வில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட் டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
இலங்கைக்கு 15 வருடங்களின் பின்னர் மீண்டும் வந்துள்ளேன். இறுதியாக 2009ம் ஆண்டு இலங்கைக்கு வந்தேன். அந்த ஆண்டு இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையான ஆண்டு.
தற்போது தேர்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்தியாவிற்கு இந்த வருட தேர்தல் எவ்வாறு முக்கியமானதாக அமைந்ததோ அதேபோன்று இலங்கைக்கும் 15 இந்த வருட தேர்தல் தீர்க்கமானதாக அமையலாம்.
வேலுப்பிள்ளை பிரபாகரனை முதலில் படம்பிடித்தவன் நான், நானே அவரின் முகத்தை உலகிற்கு முதலில் தெரியப்படுத்தினேன்
1982ம் ஆண்டு மெட்ராசில் ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வந்தது. அவர்கள் யார் என்பது அவ்வேளை எனக்கு தெரியாது.
அந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.அவரை அதுவரை எவரும் பார்த்த தில்லை. அவரது புகைப்படங்கள் எதுவும் அதுவரை இருக்கவில்லை. இலங்கையின் புலனாய்வாளர்களிடம் கூட அவரின் புகைப்படம் இருக்கவில்லை. அவரை கைவிலங்குடன் நான் படமெடுத்தேன். நான் அவரை படமெடுத்தவேளை அவரின் முகத்தில் தெரிந்த சீற்றத்தை போல சீற்றத்தை வேறு எவரின் முகத்தி லும் நான் பார்க்கவில்லை.
கடும் சீற்றம் கோபம் அவரது முகத் தில் தென்பட்டது. நான் அச்சத்தில் கமராவை கீழே போட்டேன். இலங்கை புலனாய்வு பிரிவினர் அந்த படத்தை பெறுவதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதன்பின்னர் மண்டபம் அகதி முகாமிற்கு வரும் அகதிகள் மீனவர்கள் விவகாரம் குறித்து செய்தி சேகரித்திருக்கின்றேன்.
இம்முறை இந்திய தேர்தலில் தேவையில்லாமல் கச்சதீவு விவகாரம் பயன்படுத்தப்பட்டது. மீண்டும் நான் இலங்கை வந்தவேளை பிரபாகன் ஓயாத அலைகள் என்ற நடவடிக்கையை முன்னெடுத்திருந்தார்.
இலங்கை அரசாங்கத்தின் ஜெய சிக்குறு நடவடிக்கையை முறியடிப்ப தற்கான நடவடிக்கை அது. முல்லைத்தீவில் யுத்தம் இடம்பெற்றது.
அவ்வேளை ரணில் விக்கிரமசிங் கவை சந்தித்தவேளை சந்திரிகா குமாரதுங்க சமாதானத்திற்கான யுத்தத்தை நடத்துவதாக கூறினார் ஆனால் அவரால் சமாதானத்தை ஏற்படுத்த முடியவில்லை யுத்தத்தில் வெற்றிபெற முடியவில்லை என விமர்சித்தார்.
அதன் பின்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரபாகரனின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டேன்.
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி வெளியானதும் இலங் கைக்கு விஜயம் மேற்கொண்டு சரத் பொன்சேகா உட்பட முக்கியமானவர் களை சந்தித்தேன். பிரபாகரனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதில் மர்மங்கள் சந்தேகங்கள் உள்ளன - என்றார்.