பிரித்தானிய இளவரசர் ஹரி, கனடாவில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுடன் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன



பிரித்தானிய இளவரசர் ஹரி, கனடாவில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுடன் காணப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
விடயம் என்னவென்றால், இளவரசர் ஹரி 2014ஆம் ஆண்டு, போரில் காயமடைந்த மற்றும் உறுப்புகளை இழந்த இராணுவ வீரர்களுக்காக இன்விக்டஸ் விளையாட்டுகள் என்னும் விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கினார்.
ஆண்டு தோறும் அந்த விளையாட்டுப் போட்டிகள் வெவ்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன.
இம்முறை, அதாவது, 2025ஆம் ஆண்டுக்கான இன்விக்டஸ் விளையாட்டுப்போட்டிகள், கனடாவில் நடைபெற்றுள்ளன.
அந்த போட்டிகளுக்காகத்தான் இளவரசர் ஹரி கனடா சென்றுள்ளார்.
இன்விக்டஸ் போட்டிகளின் இறுதி நிகழ்ச்சிகளில் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் கலந்துகொண்டுள்ளார்.
ஹரியும் ட்ரூடோவும் மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்டிருக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டுக்கான, அதாவது, 2026ஆம் ஆண்டுக்கான இன்விக்டஸ் போட்டிகள் பிரித்தானியாவில் நடைபெற உள்ளதால், அவை பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
