பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு மட்டக்களப்பில் முதலாவது கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது.
6 months ago

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது கட்டுப்பணம் இன்று திங்கட்கிழமை (30) செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இம்முறை தமிழ் உணர்வாளர் அமைப்பின் சார்பாக சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் எட்டுப்பேரை களமிற்ககவுள்ளதாவும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.
ஊழல்கள்,மோசடிகள் அற்ற அரசியலை முன்னெடுப்பதற்காகவே தாம் களமிறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
