கனடா அல்பர்ட்டா மாகாணத்தின் தென் கல்கரி பகுதியில் இளம் தாயும் மகளும் காணாமல் போய் உள்ளனர்.

4 months ago


கனடாவின் அல்பர்ட்டா மாகா ணத்தின் தென் கல்கரி பகுதியில் 24 வயதான இளம் தாய் ஒருவரும் அவரது மூன்று வயது மகளும் கடந்த 22 ஆம் திகதி முதல் காணாமல் போய் உள்ளனர்.

24 வயதான டெஸிரி டி அவிலா மற்றும் மூன்று வயதான சாஸ்டி டி அவிலா ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தென் கல்கரியின் நான்டோன் நகரில் இந்த இருவரும் காணாமல் போய் உள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் காஸ்ட்கார் பகுதிக்கு இந்த இருவரும் பயணித்த போது காணாமல் போயிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கியா ரியோ ரக வாகனம் ஒன்றில் இருவரும் பயணித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பெண் 5 அடி 4 அங்குல உயரத்தை கொண்டவர் எனவும் 53 கிலோகிராம் எடையு உடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.