எகிப்திற்கு சுற்றுலா பயணம் செய்யும் கனடிய சுற்றுலா பயணிகளுக்கு விசேட சலுகை

3 months ago


எகிப்திற்கு சுற்றுலா பயணம் செய்யும் கனடிய சுற்றுலா பயணிகளுக்கு விசேட சலுகை 

கடந்த ஒரு ஆண்டு காலமாக எகிப்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் கனடிய பிரஜைகளுக்கு விசா கட்டணம் அறவீடு செய்யப்பட்டு வந்தது.

மேலும் ஒன்லைன் வீசா மற்றும் ஒன் அரைவல் வீசா ஆகிய நடைமுறைகளையும் கனைடியர்களுக்கு ரத்து செய்திருந்தது.

இதனால் எகிப்திற்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணி ஒருவர் 150 டாலர்களை செலவிட நேரிட்டுள்ளது.

விண்ணப்ப படிவங்களை அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு வீசா நடைமுறைகளுக்காக இவ்வாறு 150 டாலர் செலுத்த நேரிட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஒன் அரைவல் மற்றும் ஒன்லைன் வீசா மூலம் 35 டாலர்களுக்கு மட்டுமே செலுத்த நேரிட்டிருந்தது.

எனினும் மீண்டும் ஒன் அரைவல் மற்றும் ஒன்லைன் வீசா நடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் மூலம் கனடிய சுற்றுலா பயணிகள் நன்மை அடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறு எனினும் இந்த புதிய விசா நடைமுறை எப்பொழுது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த திகதி விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.

அண்மையில் கனடிய மற்றும் எகிப்து வெளிவகார அமைச்சர்களுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

அண்மைய பதிவுகள்