தமிழ் அரசுக் கட்சியின் இன்றைய பரிதாப நிலைமைக்கு அந்தக் கட்சியிலுள்ள ஒருவர் மட்டுமே காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார் எம்.பி க. வி. விக்னேஸ்வரன்.
தமிழ் அரசுக் கட்சியின் இன்றைய பரிதாப நிலைமைக்கு அந்தக் கட்சியிலுள்ள ஒருவர் மட்டுமே காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன்.
யாழ்ப்பாணத்தில் அவர் நேற்று செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். இதில் பங்கேற்ற செய்தியாளர் ஒருவர், தமிழ் அரசுக் கட்சியிலிருந்து சிலர் பிரிந்து கட்சி ஒன்றை உருவாக்கவுள்ளனர் என்று கூறப்படுவது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த போதே விக்னேஸ்வரன் மேற்கண்ட வாறு பதிலளித்தார்.
மேலும், பலமான கட்சியாக இருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் இன்றைய பரிதாப நிலைக்கு ஒருவரே காரணம். கட்சியை பிரிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியவர் அவரே. நான்கூட அந்தக் கட்சியிலிருந்தே வெளியேறினேன். நான் வெளியேறுவதற்கும் அவரே காரணம். அந்தக் கட்சியிலிருந்து மேலும் பலர் வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை - என்றார்.
இதேநேரம், தமிழ்ப் பொது வேட் பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டி லிருந்து எமது கட்சி வெளியேறவில்லை. தொடர்ந்தும் எமது கட்சி ஆதரவு வழங்குகிறது. நான் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால் அண்மைக்காலமாக பிரசாரத்திலோ அதுசார் விடயங்க ளிலோ நேரில் பங்கேற்க முடியவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுக் கட்டமைப்பினரை பேச்சுக்கு அழைத்தது குறித்து பேசிய அவர்,
எனக்கும் ஜனாதிபதியின் அழைப்பு கிடைத்தது. ஆனால், பொதுக் கட்ட மைப்பினருக்கும் சேர்த்து அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் பொதுக்கட்டமைப்பினருடன் இணைந்தே முடிவு செய்ய வேண்டும். இதனால், தனிப்பட்ட முறையில் இந்த சந்திப்பில் பங்கேற்க முடியாது என்று ஜனாதிபதி அலுவலகத்துக்கு தெரிவித்துள்ளேன். தனிப்பட்ட முறையில் ஜனாதிபதியுடன் பேசுவது பிழை - என்றும் கூறினார்.