யாழில் கூறும் விடயங்களை கேட்டு அழிவை நோக்கிச் செல்ல முடியாது! பிள்ளையான் சொல்கிறார் வடக்கு, கிழக்கில் உள்ளக பிரச்னைகள் தானாம்!
யாழில் கூறும் விடயங்களை கேட்டு அழிவை நோக்கிச் செல்லமுடியாது!பிள்ளையான் சொல்கிறார் வடக்கு, கிழக்கில் உள்ளக பிரச்னைகள்தானாம்!
யாழ்ப்பாணத்தில் கூறப்படும் விடயங்களைக் கேட்டு அழிவை நோக்கிச் செல்லமுடியாது. அவர்களின் பிரிவினைவாத கருத்துகளை பின்பற்றினால் பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியாது.
வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக புரையோடிப்போயுள்ள உள்ளக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிள்ளையான் என்று அறியப்பட்ட சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று அம்பாறை- திருக்கோவிலில் நடந்த பிரசார கூட்டத்திலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியல் என்பது மக்களின் ஆணை ஊடாக ஆணையைப் பிடிப்பதாகும். நாட்டில் நிறைவேற்றுத்துறையின் அதிகாரம் என்பது சிறுபான்மை மக்களுக்கு இன்றியமையாத ஒன் றாகும்.
அந்த வகையில் கிழக்கு மக்களின் முழு நம்பிக்கையையும் வென்ற தலைவராக ரணில் விக்கிரம சிங்கவை வெற்றி பெறச் செய்வதற்கு நாம் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
நாட்டு மக்கள் மிகுந்த துயரத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே முன்வந்தார்.
அதற்கு செலுத்தும் நன்றிக் கடனாக நாம் மீண்டும் மக்கள் ஆணையை அவருக்கு வழங்க வேண்டும். அம்பாறை தமிழ் மக்களின் ஆணை நிச்சயம் ரணில் விக்கிரமசிங்கவுக்கே வழங்கப்படும்.
இதனைப் பயன்படுத்திக் கொண்டு அம்பாறையின் அபிவிருத்தியில் மக்கள் பங்காளர்களாக வேண்டும். வடக்கு, கிழக்கில் நீண்ட காலமாக புரையோடிப்போயுள்ள உள்ளக பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.
விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதோடு, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கின்றார்.
குறிப்பாக காணி சீர்திருத்த சட்டம் கூட அவரால் முன்வைக்கப்பட்டிருக் கின்றது. எமக்கு தனிப்பட்ட அரசியல் நோக்கம் கிடையாது. பல்வேறு பொது பிரச்னைகள் காணப்படுகின் றன. அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
எனவே யாழ்ப்பாணத்தில் கூறப்படும் விடயங்களைக் கேட்டு அழிவை நோக்கிச் செல்லப் போகின் றோமா அல்லது அனைவரும் இணைந்து கிழக்கு மாகாணத்துக்கான அதிகாரத்தையும் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறைக்கு தமிழ் அமைச்சர் ஒருவரையும் பெற்றுக் கொள்ளப் போகின்றோமா?
எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்று தீர்மானிக்க முடியாமல் வடக்கில் பிளவடைந்து காணப்படுப வர்களின் தீர்மானங்கள் பயனற்றவை என்றார்.