இலங்கையில் தரமற்ற மருந்துப் பாவனையால் 150 பேர் பார்வை இழந்துள்ளனர்.-- மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவிப்பு

2 months ago



நாட்டில் தரமற்ற மருந்து பாவனையால் 150 பேர் பார்வை இழந்துள்ளனர் என்று சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் கவனயீனம் காரணமாக பார்வை இழந்த சிலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்றைய தினம் முறைப்பாடுகளை பதிவு செய்தனர்.

இதன்போது, கருத்து வெளியிட்ட மருத்துவர் மேலும் தெரிவித்தவை வருமாறு,

எந்தவித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படாமல் கடந்த அரசாங்கத்தால் தரமற்ற மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டன.

கண் பார்வைக்குரிய மருந்தும் அவற்றில் உள்ளடங்கும். இந்த மருந்து பாவனை காரணமாக 150 பேர் பார்வை இழந்துள்ளனர். பலர் பகுதியளவில் பாதிக்கப் பட்டுள்ளனர்.

எனினும், உயிரிழந்தோரின்          எண்ணிக்கை குறித்து உரிய    கணக்கெடுப் புகள் மேற்கொள்ளப்படவில்லை.

இவ்வாறு பாதிப்புற்றோருக்கு அரசாங்கத்தால் எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

ஆதலால், நாம் இன்று (நேற்று) குற்றப் புலனாய்வு திணைக் களத்தில் முறைப்பாடு பதிவுசெய் துள்ளோம்.

புதிய அரசாங்கத்தின் மீது எமக்கு நம்பிக்கை உண்டு. இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என நாம்      அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறோம் என்றார். 



அண்மைய பதிவுகள்