தமிழ்நாடு செல்ல கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சென்ற எம்.பி சி.சிறீதரன் விமான நிலைய அதிகாரிகளால் தடுக்கப்பட்டார்.

தமிழ்நாடு செல்ல கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் சென்ற எம்.பி சி.சிறீதரன் விமான நிலைய அதிகாரிகளால் தடுக்கப்பட்டார்.
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் இடம்பெறும் உலக புலம்பெயர் தமிழர்கள் தின நிகழ்வில் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் கலந்துகொள்வதற்காகச் சென்னை செல்வதற்கு நேற்று கட்டுநாயக்க பண்டார நாயக்கா சர்வதேச விமான நிலையம் சென்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விமான நிலைய அதிகாரிகளால் தடுக்கப்பட்டார்.
இதையடுத்து எந்த உத்தரவு மூலம் தடுக்கப்படுகின்றேன் என்ற கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய போதும் விமான நிலைய அதிகாரிகளால் உரிய பதில் அளிக்கப்படவில்லை.
அதன் பின்னர் அவர் புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சமயம் குற்றவியல் வழக்குக் குற்றச்சாட்டொன்று இருக்கின்றது எனக் கூறப்பட்டது.
“பழைய கடவுச்சீட்டில் ஒரு தவறு இருக்கின்றது. அதனால் நீங்கள் போக முடியாது."- என்று அங்கு நின்ற அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சமயம் விமான நிலையம் ஊடாகப் பயணித்த மற்றுமோர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விமான நிலைய அதிகாரிகளுடன் உரையாடினார்.
இதையடுத்து சுமார் இரண்டு மணி நேரத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
