கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் இருந்த ஹெரோயினின் பெறுமதி சுமார் 2 கோடி ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 1 கிலோ 53 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
யுக்திய சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று முன்தினம் (20) பிற்பகல் பிலியந்தலை பிரதேசத்தில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
பிலியந்தலை மிரிஸ்வத்த பிரதேசத்தில் உள்ள தனியார் கடை ஒன்றின் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்று சோதனையிடப்பட்டது.
வேனின் சாரதி உட்பட மற்றுமொருவர் அங்கு தங்கியிருந்ததுடன், சாரதி இருக்கைக்கு அருகில் தங்கியிருந்த நபரின் பையை சோதனையிட்ட போது 1 கிலோ 53 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், கைவிலங்கு மற்றும் இலத்திரனியல் தராசு என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மொரட்டுவ விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் என தெரியவந்துள்ளது.
வேனின் சாரதியான சந்தேகநபர் மொரட்டுவ விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆவார்.
இதன்படி, ஹெரோயின் கடத்தலுக்கு உதவிய மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
