யாழ்.ஆணைக்கோட்டையில் உள்ள வீடொன்று நேற்று (03) இரவு 11 மணியளவில் இனந்தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டது.
2 months ago
யாழ்.ஆணைக்கோட்டையில் உள்ள வீடொன்று நேற்று (03) இரவு 11 மணியளவில் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
கிறிஸ்துராஜா கொலின்ஸ் என்பரது வீடே அடித்து நொறுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது
இரவு 11 மணியளவில் வீட்டார் நித்திரையில் இருக்கும் போது மோட்டார் சைக்கிளில் வாள்களுடன் வந்த 4 பேர் வீட்டின் யன்னல் கண்ணாடிகளை உடைத்தும் மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு சென்றனர்.
மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.