யாழ் மற்றும் கிளிநொச்சிக்கு பதில் அரச அதிபர்கள் நியமனம்

6 months ago


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நிரந்தர பதில் அரச அதிபர்கள் இன்று பிரதமரால் நியமிக்கப்பட்டனர்.

யாழ். மாவட்டத்துக்கு ம. பிரதீபனும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு எஸ்.முரளீதரனுமே இவ்வாறு நிரந்தர பதில் அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டனர்.

மாவட்டங்களின் அரச அதிபர்கள் ஓய்வுபெற்றுச் சென்ற பின்னர் கடமை நிறைவேற்று அரச அதிபர்களாக பணியாற்றிய இருவருமே இவ்வாறு இன்று பிரதமர் தினேஷ் குணவர்தனாவால் நிரந்தர பதில் அரச அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் செயலகத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்ற நிகழ்விலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்