போர் இடம்பெற்ற காலத்தில் மின்பிறப்பாக்கியைப் புலிகள் தீயிட்டு எரித்தபோது கூட, மின் துண்டிக்கப்படவில்லை -- எஸ்.எம்.மரிக்கார் தெரிவிப்பு

2 months ago



போர் இடம்பெற்ற காலத்தில் 33 ஆயிரம் மெகாவோல்ட் மின்பிறப்பாக்கியைப் புலிகள் தீயிட்டு எரித்தபோது கூட, நாடளாவிய ரீதியில் மின் துண்டிக்கப்படவில்லை.

ஆகையால் குரங்கின்மீது பழிசுமத்திக் குரங்குச் சேட்டைகள் காண்பிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஒரு குரங்கால் முழு நாட்டுக்கும் மின் துண்டிப்பை ஏற்படுத்த முடியுமா? கடந்த அரசாங்கங்களின் குறை கூறியே இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

தற்போது ஆட்சியிலிருந்து கொண்டும் அதையே செய்கின்றனர்.

மேடைகளில் வீரவசனம் பேசுவதை விட, நடைமுறையில் ஆட்சி செய்வது சிக்கல் என்பதை இப்போது ஜே.பி.வி. புரிந்துகொண்டிருக்கும்.

அளவுக்கதிகமாக மக்களை ஏமாற்ற முற்படவேண்டாம். ராஜபக்சக்களை ஆட்சியில் அமர்த்தி, அவர்களைத் துரத்துவதற்கு மைத்திரிக்கு வாக்களித்து பின்னர் கோத்தாபயவை நாட்டை விட்டு ஓடச் செய்தவர்களே உங்களையும் ஆட்சியில் அமர்த்தியிருக்கின்றனர் என்பதை மறந்துவிட வேண்டாம் - என்றார். 

அண்மைய பதிவுகள்