இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டனர்
2 months ago

டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை பொலிஸினால் மேற்கொள்ளப்பட்ட அறிவித்தலின் அடிப்படையில், சர்வதேச பொலிஸார் குறித்த சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிக்கையை வௌியிட்டிருந்தனர்.
குறித்த மூன்று சந்தேக நபர்களும் இன்று காலை UL-226 ரக விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.
இவ்வாறு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் குறித்த விபரங்களையும் பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
