யாழில் மரண இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் 11 பேர் காயம்

மரணச் சடங்கு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது, வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பின் பக்கமாக வந்து மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் சிறுவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (24) பிற்பகல் 3 மணியளவில் யாழ். நல்லூர், கல்வியங்காடு, இராஜ வீதியில் இடம்பெற்றுள்ளது.
கார் சாரதி யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஐயப்ப விரத யாத்திரைக்கு இந்தியாவுக்குச் சென்றிருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த பிரபல நாதஸ்வர வித்துவானும் ஐயப்ப பக்தனுமான வடிவேலு செல்வராசாவின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன.
இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து பயணித்த கார் பின் பக்கமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த 11 பேரில் 5 பேர் சிறு காயங்கள் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
ஏனைய 7 பேரும் படுகாயங்களுக்கு ஆளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சத்தியசீலன் சஞ்ஜீவ் (வயது -19), சம்பத் ஜனார்த்தனன் (வயது 14), தவராசா அனஞ்ஜயன் (வயது - 19), சிறிதரன் கபினாஸ் (வயது 20), உலகநாதன் ஜெயந்தன் (வயது 23), தவராசா ஆகாசன் (வயது -13) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
