இலங்கையில் சிறுவர் உணவு பெட்டிகள், தண்ணீர் போத்தல்கள் தரமற்றவை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவிப்பு

2 months ago



இலங்கையில் சிறுவர்கள் பயன்படுத்தும் மதிய உணவு பெட்டிகள், தண்ணீர் போத்தல்களில் 75 வீதமானவை தரமற்றவை என்று பொது சுகாதார பரிசோதகர் சங்கம்    தெரிவித்துள்ளது.

தரமில்லாத இவ்வாறான பொருட்கள் உள்நாட்டு சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தப் பொருட்கள் சிறுவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

இவை, சீனா போன்ற நாடுகளில் இருந்து கட்டுப்பாடில்லாமல் இறக்குமதி செய்யப்படுகின்றது.

இருப்பினும், சந்தைக்குச் செல்லும் வாடிக்கையாளர் இந்தப் பொருட்களை வாங்கும் போது ஏதேனும் புரிதல் உள்ளதா என்று கேட்டோம்.

பல நுகர்வோர் தயாரிப்பின் விலை மற்றும் அதன் அழகைப் பற்றி மட்டுமே அவதானிப்பதாக தெரிவிக்கின்றனர்.

சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, உணவு மற்றும் தண்ணீருக்குப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வாங்கும் போது, அதன் கீழ்ப்பகுதியில் BPA அல்லது கீழே 5 என்ற எண்                    எழுதப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இல்லையெனில்,

பொருட்களில் கண்ணாடியுடன் ஒரு முள்கரண்டியின் குறி இருக்கிறதா என்று சரிபார்க்கவும்.

இந்த இரண்டு அடையாளங்களும் இருந்தால், இது போன்ற சாதனங்கள் உங்கள் குழந்தைக்கும் உங்களுக்கும் பயன்படுத்த ஏற்றது.

சந்தையில் பல்வேறு இலக்கங்களுடன் விற்பனை        செய்யப்படும் கவர்ச்சிகரமான மதிய உணவுப் பெட்டிகள், தண்ணீர் போத்தல்கள் தொடர்பில் எதிர் காலத்தில் சோதனைகள்                தீவிரப்படுத்தப்படும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரி வித்துள்ளார். 

அண்மைய பதிவுகள்