பதவி விலகல் கடிதத்தை உபவேந்தர் ஏற்காத நிலையில் பேராசிரியர் எஸ்.ரகுராம் யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியாக தொடர்வார்.

2 months ago



பதவி விலகல் கடிதத்தை உபவேந்தர் ஏற்காத நிலையில் பேராசிரியர் எஸ்.ரகுராம் யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியாக தொடர்வார்.

யாழ்.பல்கலைக்கழக பேரவையின் தீர்மானத்துக்கு அமைவாக கலைப்பீடாதிபதியாக அவர், தொடரவுள்ளார்.

பல்கலைக்கழக பேரவை இன்று புதன்கிழமை பிற்பகல் கூடியபோதே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி இடைநிறுத்தப்பட்ட சில மாணவர்கள் தொடர்பாக ஏற்கனவே பேரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் இன்றைய கூட்டத்தில் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் போதைப்பொருள் பயன்படுத்திய சில மாணவர்கள் தொடர்பாக கலைப் பீடாதிபதி என்ற முறையில் ரகுராம் எடுத்த தீர்மானம் நியாயமானதாக இருந்தது.

ஆனால் பேரவையின் தீர்மானம் வேறு நோக்கில் இருந்த காரணத்தால் ரகுராம் பதவி விலகும் நிலை ஏற்பட்டது.

மேலும், இதனையடுத்து பேரவையின் தீர்மானத்துக்கு எதிராக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கமைய, கலைப்பீடாதியாக ரகுராம் தொடரவுள்ளமை சிறந்த முடிவென மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.