பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்கி அவர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது என எம்.பி நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களை தாக்கி அவர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது என சிறீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், கட்சி என்ற ரீதியில் நாம் வலுவாக இருக்கிறோம். இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி வகித்த போதும் சிலர் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்தனர்.
ராஜபக்ஷாக்களால் தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதிக்கு உதவுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது. தற்போது, ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேசி தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப் பினர்களின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட் டுள்ளார்.
எண்ணிக்கை விளையாட்டில் ஈடுபட எம்மாலும் முடியும். எனினும், அவ்வாறு செய்து அவர்களின் நிலைமைக்கு கீழே இறங்க நாம் விரும்பவில்லை. தேர்தலின் போது மக்கள் யாருடன் இருக்கின்றார்கள் என்பது தெரியவரும்.
அரசியல்வாதிகள் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை சில அரசியல்வாதிகள் உறுதிப் படுத்துகின்றனர். இவ்வாறான பின்னணியில் அரசியல்வாதிகளை தாக்கி வீடுகளை எரிப்பது நியாயமானது என்றும் அவர் கூறினார்.