அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

1 day ago



அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடா தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

கனடாவைச் சேர்ந்த அதிகளவான மக்கள் அமெரிக்காவின் 51 ஆம் மாநிலமாக கனடா மாறுவதனை விரும்புகின்றனர் என தெரிவித்துள்ளார்.

கனடாவினால் அமெரிக்கா பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கனடா அமெரிக்காவின் மாகாணமாக உள்வாங்கப்பட்டால் வரி விதிப்புகள் மேற்கொள்ளப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ரஷ்யா சீனா போன்ற நாடுகளிலிடமிருந்து பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் கனடா இணைந்து கொண்டால் அது கனடாவிற்கு பெரும் நன்மையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

கனடாவினால் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகைகளுக்காக அமெரிக்கா நெருக்கடிகளை எதிர்நோக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்களை புரிந்து கொண்டே கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.