யாழ்ப்பாணத்தில் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்பு

2 months ago



யாழ்ப்பாணத்தில் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கைதடி பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தோட்டத்துக்குச் சென்ற விவசாயிகள் கிணற்றினுள் சிசு ஒன்றின் சடலம் மிதப்பதாகச் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இதையடுத்துச் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைய பதிவுகள்