யாழ்.காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பலில் தடை செய்யப்பட்டவர்கள் பயணித்த சமயம் வழிமறிக்கப்பட்டு சொந்த நாடுகளிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

4 months ago


யாழ்.காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் சேவையின் ஊடாக இரு நாட்டிலும் தடை செய்யப்பட்டவர்கள் பயணித்த சமயம் வழிமறிக்கப்பட்டு சொந்த நாடுகளிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்தியாவில் இருந்து நேற்று மதியம் காங்கேசன்துறை துறைமுகத்தை அடைந்த கப்பலில் இலங்கைக்குள் உள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்ட இந்தியாவின் நாகைபட்டினத்தைச் சேர்ந்த இருவர் பயணித்தமையினால் இருவரும் அதே கப்பலில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதேபோன்று இலங்கையின் மாத்தளையைச் சேர்ந்த ஒருவர் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினத்திற்குச் சென்ற சமயம் அவரது பெயர் இந்தியாவில் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தமையினால் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் வகையில் நாகபட்டினம் துறைமுகத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய பதிவுகள்