அத்துருகிரிய படுகொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் விசாரணை செய்யப்படுவதை காண்பிக்கும் வீடியோவை இலங்கை பொலிஸார் வெளியிட்டுள்ளமை குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
2021ம் ஆண்டு பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட வழிகாட்டல்களிற்கு முரணான விதத்தில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொலிஸார் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என பல முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு கிடைத்ததை தொடர்ந்து 2021 இல் விசாரணைகளை வீடியோவில் பதிவு செய்து வெளியிடுவதை நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டார் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.