மாலைதீவின் கல்வி வளர்ச்சிக்கு இலங்கையில் இருந்து ஆசிரியர்கள்

6 months ago

மாலைதீவின் கல்வி வளர்ச்சிக்கு இலங்கையிலிருந்து தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை அமர்த்துவதற்கு மாலைதீவு தீர்மானித்துள்ளது.

இலங்கையிலிருந்து தேர்ச்சிபெற்ற ஆசிரியர்களை, மாலைதீவுக்கு அனுப்புமாறு மாலைதீவு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மாலைதீவுக்கான புதிய தூதுவர் பெலோப் பொலகே ரங்க சுஜீவ குணவர்த்தன தனது நியமனக் கடிதத்தை மாலைதீவு ஜனாதிபதியிடம் பெற்றுக்கொண்டார்.

இதன்போதே மாலைதீவு ஜனாதிபதி, மாலைதீவின் கல்வி வளர்ச்சிக்கும், சுகாதார அபிவிருத்திக்கும் இலங்கை உதவவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.