இலங்கை நீதி, பொறுப்பு கூறலில் பணியாற்ற எதிர்பார்க்கிறோம் - அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் தெரிவிப்பு
10 months ago
இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முக்கியமான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதை மையப்படுத்தி தொடர்ந்தும் பணியாற்ற எதிர்பார்க்கின்றோம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச குற்றவியல் நீதிக்கான சிறப்புத் தூதுவர் பெத் வான் ஷாக் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டனில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை - இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதிக்கழகத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி நிஷா பிஸ்வாலை சந்தித்தும் உரையாடியுள்ளார்.
அதில் கொழும்புத்துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 553 மில்லியன் டொலர் நிதி உதவியை செயற்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
