மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசம் சுற்றிவளைக்கப்பட்டு பாரிய தேடுதல்.

5 months ago


மட்டக்களப்பு  காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை - பச்சை வீட்டு திட்டம் பிரதேசத்தில் இன்று (24) காலை விசேட அதிரடிப்படையினரால் பாரிய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 15ஆம் திகதி குறித்த கிராமத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் மற்றும் கடந்த 22 ஆம் திகதி அதே வீட்டின் முன்பாக இருந்து கண்டெடுக்கப்பட்ட கைகுண்டு ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து மேற்படி சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கமைய, இன்று அதிகாலை ஆரம்பிக்கப்பட்ட இச்சுற்றிவளைப்பின் போது பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஒவ்வொரு வீடாக சென்று மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், கிட்டத்தட்ட 35 வீடுகள் இவ்வாறு சுற்றிவளைப்பு தேர்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அதேவேளை, 28 பொலிஸார்,10 விசேட அதிரடிப்படையினர் மற்றும் 22 இராணுவத்தினர் என சுமார் 60 பேர் உள்ளிட்ட குழு இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ்.ரமேஷ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அண்மைய பதிவுகள்