வவுனியாவில் மாணவன் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பயிலுநர் ஆசிரியை ஒருவர் கைது.
வவுனியாவில் 14 வயது மாணவன் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பயிலுநர் ஆசிரியை ஒருவரை நேற்று கைது செய்யப்பட்டார் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா தெற்கு வலயத்துக்கு உட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆசிரியையின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் பாடசாலையில் முறைப்பாடு செய்தும் தீர்வு கிடைக்காத நிலையில் மாணவனின் பெற்றோரால் சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா பொலிஸ் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டையடுத்து குறித்த மாணவனின் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா பொது மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மாணவன் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.