ஒன்ராரியோவின் மதுபான விற்பனை மையமான LCBOயின் ஊழியர்களின் வரலாற்றின் முதலாவது வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
ஒன்ராரியோ பொதுச் சேவை ஊழியர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் பத்தாயிரம் LCBO ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (05) நள்ளிரவு 12:01 மணி முதல் சட்டப்பூர்வ வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நேற்று ஆரம்பமான வேலை நிறுத் தம் காரணமாக அனைத்து LCBO கடைகளும் மூடப்பட்டுள்ளன.அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாகாண ரீதியில் 669 LCBO கடைகள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வேலை நிறுத்தக் காலத்தில், வாடிக்கையாளர்கள் இணையதளம், கைபேசி செயலி மூலம் மதுபானங்களை கொள்வனவு செய்யலாம் என LCBO குறிப்பிட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்குள் ஓர் ஒப் பந்தம் எட்டப்படவில்லை என்றால், 32 LCBO கடைகள் மாகாணம் முழுவதும் ஜூலை 19 முதல் திறக்கப்படும் என LCBO கூறியுள்ளது.
ஆனால் வெள்ளி, சனி, ஞாயிற் றுக்கிழமைகளில் மட்டும் வரையறுக் கப்பட்ட நேரங்களில் இந்த LCBO கடைகள் செயல்படும் என தெரியவருகிறது.