யாழ்.அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.





யாழ்.அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (25) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருமணம் செய்து 10 வருடங்கள் கடந்த நிலையில் குடும்பத்தில் பிரச்சினை இடம்பெற்று வருவதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கணவன் மது போதையில் வீட்டுக்கு வந்த நிலையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட பின்னர் அறை ஒன்றுக்குள் பூட்டி வைத்து தீயினை மூட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான பாலகிருஷ்ணன் நிருத்திகா என்ற 28 வயதான பெண் எரிகாயங்களுக்கு உள்ளானார்.
காயமடைந்த பெண் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கணவன் தப்பி சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
