இந்தியா நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணத்தில் ஈடுபடும் கப்பலானது போதிய அளவு எரிபொருள் இன்மையினால் இடைநிறுத்தம்.

இந்தியா நாகப்பட்டினத்துக்கும் இலங்கை காங்கேசன்துறைக்கும் இடையில் பயணத்தில் ஈடுபடும் கப்பலானது போதிய அளவு எரிபொருள் இன்மையினால் நேற்று வியாழக்கிழமை (05) குறித்த பயணமானது இடைநிறுத்தப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த கப்பல் சேவையானது உத்தியோப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றையதினம் காலை நாகைப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை குறித்த கப்பல் வந்தடைந்தது.
இவ்வாறு வந்த கப்பலானது காங்கேசன்துறையில் இருந்து நாகை பட்டினத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு தயாரானது. இந்நிலையில், பயணிகளும் கப்பலில் ஏறி பயணத்திற்கு தயாராக இருந்தனர்.
இருப்பினும், கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மையினால் குறித்த பயணமானது இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பயணத்திற்கு தயாராக இருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
