வவுனியா, பூவரசங்குளம் குருக்கல் புதுக்குளம் பகுதியில் இன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

3 months ago


வவுனியா, பூவரசங்குளம் குருக்கல் புதுக்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பாெலிசார் தெரிவித்தனர்.

வவுனியா குருக்கல் புதுக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மாேதி விபத்துக்குள்ளானது.

இதன்பாேது விபத்துக்குள்ளான மாேட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததுடன், பயணித்த இளைஞனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் 30 வயதுடைய குருக்கல் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் சர்மிளன் என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



அண்மைய பதிவுகள்