இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுசரிக்க பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறைகூவல்
2 months ago



இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுசரிக்க பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அறைகூவல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக குறித்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 4ஆம் திகதியினை இலங்கை, தமது சுதந்திரதினமாக கொண்டாடி வருகின்றது.
ஆயினும், அன்றைய தினமே பறிக்கப்பட்ட தமிழர் தேசத்தின் இறையாண்மை, ஆங்கிலேயரிடமிருந்து சிங்கள பேரினவாதிகளுக்கு கைமாற்றப்பட்ட தினமாகும்.
வரலாற்று ரீதியாக இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகள், ஒன்றிணைந்த பகுதிகள், இத்தீவின் மூத்த குடிகளான தமிழ் மக்களின் தாயக பூமியாக இருந்தது.
அந்த தாயகபூமி இறையாண்மை உள்ள தனித்தேசமாக இருந்தது என்ற வரலாற்று உண்மையை மறுதலித்து எமது சுதந்திரம் சிங்கள தேசத்திடம் கையகப்படுத்தப்பட்ட நாளாகவே இந்நாள் உள்ளது - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
