மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வீதியில் நின்ற வாகனத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து.--ஒருவர் உயிரிழந்தார்

2 weeks ago



மட்டக்களப்பு தலைமைக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கேஸ்வரர் ஆலய பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மாமாங்கம், பாடசாலை வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய ரஞ்சித் விசிதன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கூழாவடி, மாமாங்கேஸ்வரர் ஆலய வீதியில் உள்ள ஒப்பந்தகாரர் ஒருவர் அவரது வாகனங்களை வீதியில் நிறுத்தி வைத்திருந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாரிய வாகனங்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனத்திலேயே மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.