தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி தமது இன்னுயிர்களை ஈகை செய்த வீரமறவர்களின் நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வருகிறது.

1 month ago



தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி தமது இன்னுயிர்களை ஈகை செய்த வீரமறவர்களை உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வருகிறது.

வடக்கு, கிழக்கில் 25 இற்கும் மேற்பட்ட துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயங்களில்  உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவேந்தப்படுகின்றனர்.

துயிலும் இல்லங்கள், மாவீரர் நினைவிடங்கள், விசேடமாக அமைக்கப்பட்ட மாவீரர்        நினைவாலயங்கள் சிவப்பு, மஞ்சள் வர்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு நினைவேந்தல்கள் இடம்பெறுகின்றன.

இன்று மாலை 6.05 மணிக்கு         ஆலயங்களில் மணி யோசை எழுப்பப்பட்டு துயிலும் இல்லங்கள், வீடுகள், பொது இடங்களில் சமநேரத்தில் சுடர் ஏற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் கோப்பாய்,    கொடிகாமம், உடுப்பிட்டி - எள்ளங்குளம், வடமராட்சி கிழக்கு - உடுத்துறை, வேலணை - சாட்டி மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல்கள் நடைபெற்றன. 

அத்துடன், நல்லூர், நெல்லியடி - மாலைசந்தியில் விசேடமாக அமைக் கப்பட்டுள்ள மாவீரர் நினைவு ஆலயங்களிலும் தியாகி திலீபன் நினைவுத்தூபி, யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினை விடம் மற்றும் மாவீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட இடங்களிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் நினைவிடங்களில் நினைவேந்தல் நடைபெற்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில்       விசுவமடு - தேராவில், முள்ளியவளை, ஆலங்குளம், இரணைப்பாலை, அளம்பில், வன்னிவிளான்குளம்,    முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லங்களிலும் கொக்குத் தொடுவாய், களிக்காடு, தேவிபுரம், இரட்டைவாய்க்கால், முல்லைத்தீவு நகர கடற்கரை, சுதந்திரபுரம் ஆகிய இடங்களில் மாவீரர்களை அஞ்சலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டி வெளி, பெரிய பண்டிவிரிச்சான், முள்ளிக்குளம் துயிலும் இல்லங்களிலும் மாவீரர்களின் நினைவிடங்களிலும் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதேபோன்று வவுனியாவில்    ஈச்சங்குளம் துயிலும் இல்லத்திலும் நகரப் பகுதியிலும் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தரவை, கண்டலடி, மாவடி முன்மாரி, தாண்டியடி, துயிலும் இல்லங்களில் மற்றும் விசேடமாக அமைக்கப்பட்ட இடங்களில் மாவீரர் நினைவேந்தல்கள் நடைபெற்றன.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிகுடிச்சாறு துயிலும் இல்லத்தில் நினைவேந்தல் இடம்பெற்றன. அத்துடன், கிழக்கு பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தல் இடம்பெற்றது.

திருகோணமலை நகரப் பகுதியிலும் விசேட இடங்களிலும் மாவீரர் நினை வேந்தல்கள் நடைபெற்றன. 

படங்கள்- பிரபா டிலக்சன், மயூரப்பிரியன்

அண்மைய பதிவுகள்