யாழ். சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவு - நெடுங்கேணி தண்டுவான் வெள்ளைப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலைக்கு செலவில் கட்டடம்
3 months ago

யாழ்.தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவு - நெடுங்கேணி தண்டுவான் வெள்ளைப் பிள்ளையார் அறநெறிப் பாடசாலைக்கு 950,000 ரூபாய் செலவில் கட்டடம் நிர்மாணம் செய்து வழங்கப்பட்டது.
அறநெறிப் பாடசாலை இணைப்பாளர் அ. சுகந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் கட்டடத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் ஒட்டு சுட்டான் பிரதேச செயலகத்தை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜதீஸ், சந்நிதியான் ஆச்சிரமம் உதவி கிராம உத்தியோகத்தர் லினிசா மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், கிராம அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
