பொங்கு தமிழ்' பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சி நாள் நிகழ்வு இன்று யாழ்.பல்கலைக் கழகத்தில்
4 hours ago
பொங்கு தமிழ்' பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சி நாள் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
'பொங்கு தமிழ்' பிரகடன பொது நினைவுத் தூபி முன்பாக இடம்பெற்ற 'பொங்கு தமிழ்' பிரகடன உரையைத் தொடர்ந்து 'பொங்கு தமிழ்' தூபிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
17.01.2001 அன்று தமிழ் மக்களின் அபிலாஷைகளான சுயநிர்ணய உரிமை,
மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் 'பொங்கு தமிழ்' பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.