பஞ்சாப்பில் பொலிஸ் நிலையம் ஒன்றைச் சூறையாடிய பொதுமக்கள் சப்-இன்ஸ்பெக்டரை சரமாரியாக தாக்கினர்.

5 months ago


பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட் டத்தில் உள்ள ஷிங்கர் பகுதியில் பொலிஸ் நிலையமும் அதன் அருகி லேயே பொலிஸ் சோதனை சாவடியும் அமைந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு அங்கு பணியில் இருந்த பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்த உள்ளூர் வியாபாரி ஒருவரை தடுத்து நிறுத்தினர்.

இரு சக்கர வாகனத்தில் அதிவேகத் தில் வந்தார் எனக் கூறி அந்த வியாபாரியை பொலிஸார் கண்டித்தனர். அப்போது வியாபாரிக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, பொலிஸார் அந்த வியாபாரியை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சில மணி நேரத்துக்கு பிறகு அந்த வியாபாரி 100-க்கும் மேற்பட்ட மக்க ளுடன்பொலிஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அந்த கும்பல் பொலிஸ் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக் கியது.

மேலும் அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரையும், மற்றொரை பொலிஸ்காரரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

பொலிஸ் நிலையத்தை சூறை யாடிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைய பதிவுகள்