




துருக்கிய கடற்படையின் டி.சி.ஜி கினாலியாடா கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
152 மாலுமிகளைக் கொண்ட இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக செர்கன் டோகன் என்பவர் கடமையாற்றுகிறார்.
டோகனுக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்றும் இங்கு இடம்பெற்றுள்ளது.
மேற்படி கப்பல் நாளை வரை இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் என்றும், அதன் மாலுமிகள் இலங்கையின் முக்கிய இடங்களைப் பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
