2025 பெப்ரவரி மாதம் முதல், வாகன இறக்குமதியால் வாகனங்களின் விலை குறையும்.-- ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்க தலைவர் தெரிவிப்பு

2 weeks ago



எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில், நாட்டில் வாகனங்களின் விலை வேகமாகக் குறைவடையும் என ஜப்பான் - இலங்கை வர்த்தக சங்க தலைவர் ஜகத் ராமநாயக்க தெரிவித்தார்.

குறைந்த இயந்திரதிறன் கொண்ட வாகனங்களே எமது நாட்டுக்கு மிகவும் பொருத்தமானவை.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய, அனுமதி வழங்கப்படவுள்ளது.

அதனால், வாகனங்களின் விலை வேகமாகக் குறைவடையும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.