போலிக் கடவுச்சீட்டில் லண்டன் சென்றவர் கட்டுநாயக்காவில் கைது

6 months ago

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி லண்டன் செல்ல முயன்ற திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் முகவர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று விமான நிலைய குடிவரவு – குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம் அவருடையது அல்ல என்பதைக் கண்டறிந்ததால், அவர் தலைமை குடிவரவு அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட தொழில் நுட்பச் சோதனையில், மற்றொரு பெண்ணின் கடவுச்சீட்டில் இந்தப்பெண்ணின் தகவல்கள் பதிவு செய்து போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அண்மைய பதிவுகள்