கிளிநொச்சி - புளியம்பொக்கணை துவரையாற்றில் பல ஏக்கர் வயல் வெள்ளத்தினால் அழிவடைந்ததாக விவசாயிகள் கவலை

1 month ago



கிளிநொச்சி - புளியம்பொக்கணை கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட துவரையாற்றை அண்டிய பகுதிகளிலுள்ள பல ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள அனர்த்தத்தினால்                அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

சுமார் 600 இற்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இரணைமடுக் குளத்தின் வான் நீர் பாய்ந்தமையினாலேயே குறித்த அழிவு இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

கடனைப் பெற்று நெற் செய்கை மேற்கொண்ட நிலையில், தாம் கடனை எவ்வாறு செலுத்தப் போகிறோம் என தெரிவில்லை என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உரிய அதிகாரிகள் தமது வயல் நிலங்களை பார்வையிட்டு தமக்கு நட்ட ஈட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைய பதிவுகள்