2030ஆம் ஆண்டுக்குள் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 10 இலட்சம் அல்லது அதற்கும் குறைவாக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

4 months ago


2030ஆம் ஆண்டுக்குள் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 10 இலட்சம் அல்லது அதற்கும் குறைவாக மட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணை அமைச்சரவைக்கு சமர்ப் பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2025ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள், முழு அரச சேவையையும் டிஜிற்றல் மயமாக்கல் மற்றும் மின்னணு அமைப்புகள் மூலம் அரசாங்க கட்டுப்பாட்டுக்கான ஓர் அமைப்பை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அரசின் செலவு சுமையைக் குறைப்பதன் மூலம் செயல்திறனை அதிகரிக்க, பரிந்துரைக்கப்பட்ட முறைகளைப் பின்பற்றி சேவையைப் பெறவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அடையாளம் காணப்பட்ட அரசதுறைகள், சட்டபூர்வ அமைப்புகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களாக மாற்றவும், அரச ஊழியர்களின் சேவைகள் குறித்து முறையான ஆய்வு மற்றும் அறிவியல் மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

அண்மைய பதிவுகள்