இலங்கைக்கு ரோஹிங்கியர்கள் அகதிகளாக வரக்கூடும் என்ற தகவலால், மனித கடத்தலுக்கு யாரும் ஈடுபட்டுள்ளனரா என்பதை அறிய விசாரணை முன்னெடுப்பு

3 hours ago



இலங்கைக்கு மேலும் ஒரு இலட்சம் ரோஹிங்கியர்கள் அகதிகளாக வரக்கூடும் என்ற உளவுத்துறை தகவல்களைத் தொடர்ந்து இந்த மனித கடத்தல் மோசடிக்குப் பின்னால் இலங்கையர் யாராவது ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கி உள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இந்த மனித கடத்தலில் இலங்கையர் ஒருவரும் ஈடுபட்டுள்ளார் என நம்பப்படுகிறது.

அதைக் கண்டறிய இப்போது விசாரணை நடந்து வருவதாக அவர் கூறினார்.

பிராந்தியத்தின் பிற இடங்களில் உள்ள ரோகிங்கியா முகாம்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களை புலனாய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இது இலங்கையை வருகைக்கான இடமாக விளம்பரப்படுத்துகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மியன்மாரைச் சேர்ந்த நாடற்ற அகதிகளான ரோகிங்கியாக்கள் புத்தாண்டின் முதல் ஐந்து நாட்களில் இப் பகுதியில் பாதுகாப்பு தேடியதாக அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு, கடலில் ஆறு பேரை இழந்த 115 ரோஹிங்கியாக்களுடன் வந்த படகு இலங்கையின் முல்லைத்தீவு கடற்படப்பில் கரையொதுங்கியது.

மேலும், பிராந்தியத்தில் உள்ள ஜனவரி மூன்றாம் திகதி 196 பேருடனும் மலேசியாவிலும், ஜனவரி ஐந்தாம் திகதி 264 பேருடன் இந்தோனேசியாவிலும் இதுவரை மொத்தம் 460 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் படகு மூலம் சென்றுள்ளனர்.

"உயிர்களைக் காப்பாற்றுவதே முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும்," என்று அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய பணியகத்தின் இயக்குநர் ஹை கியுங் ஜூன் கூறினார்.



அண்மைய பதிவுகள்