77 நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு இணையவழி மூலம் பிறப்பு சான்றிதழை வழங்க நடவடிக்கை

2 weeks ago



77 நாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு இணையவழி மூலம் பிறப்பு சான்றிதழை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பதிவாளர் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் விஜயசிங்க தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்துக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பதிவாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சுடன் இணைந்து  இலங்கைக்கு வெளியே வசிக்கின்ற 77 நாடுகளில் வசிக்கின்ற பிரதிநிதிகள் தங்களுடைய பிறப்புச் சான்றிதழ்களை இணையவழி மூலம் பெற முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் இரு வாரங்களுக்கு முன்பாக 7 நாடுகளோடு இணைந்து கலந்துரையாடியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டில் இருப்பவர்களும் இலங்கை பிரஜைகள் என்ற அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

பிறப்பு, இறப்பு, விவாகரத்து தொடர்பான சேவைகளை டிஜிற்றல் முறையில் செயற்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் பதிவாளர் நாயகம் விஜயசிங்க தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அடையாள அட்டைகளை விநியோகிக்கின்ற போது ஆட்பதிவு திணைக்களம் மற்றும் பதிவார் திணைக்களம் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அண்மைய பதிவுகள்